எங்கோ ஒரு
பேருந்து நிறுத்ததிலோ
கூட்ட நெரிசலிலோ
சந்தித்து,
புன்னகைத்து,
கைக்குலுக்கி,
பரஸ்பரம் விசாரித்து
ஆளே மாறிப்போனதாய்
ஆச்சரியப்பட்டு
மீண்டும் எங்கோவொரு
நிறுத்ததிலோ நெரிசலிலோ
சந்திப்போம் என்ற நம்பிக்கையில்
'பார்க்கலாம்டா மச்சான்'
என்று பிரியும்போதும்
கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை.

அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?










மேகம் திரண்டு
வானம் மூடி
இடி இடித்து
மின்னலோடு
வந்த மழை
பூமியை
குளிர்வித்து
வானத்தையும்
சுத்தமாக்கும்...........
நிகழ்வு
என்னை
ஈர்க்கவில்லை.

மாறாக,
எதிர்பாரா
நேரத்தில்
அங்கும் இங்குமாக
ஆரம்பிக்கும்
தூரல்
எதிர்பார்ப்பை
அதிகரித்து
வீதியில்
இருக்கும்
நான்
வீட்டுக்கு போய்விடலாம்
என்றுஎண்ணும்முன்னே
என் எண்ணத்தை
மட்டுமல்ல
என்னையும்
முழுவதும்
சுத்தம் செய்யும்
நிகழ்வே........
என்னை
ஈர்த்துவிடுகிறது.

மழையின்
மாறுதல்கள்
மனதையும்
மாற்றிவிடுகிறது.......
.