தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???
எனக்கு தெரிந்த வகையில் ஒரு சின்ன விளக்கம்:
சத்ய யுகம்/கிருத்த யுகம்:அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.
திரேதா யுகம்:ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.ராமர் அயோத்தியுலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.
துவாபர யுகம்:பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.
கலி யுகம்:அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…
ஏதோ என்னளவில் தோன்றிய ஒரு விளக்கம்.

0 comments: