1. ஒகியோ மாகாணத்தின் பால்டிங் நகரில் குரைக்கும் நாயை அடக்க சட்டப்படி போலிஸ்காரர் நாயை அடிக்கலாம்.
  2. நியூ யார்க் மாகாணத்தில் கரமெல் பகுதியில் பொருத்தமற்ற ஜக்கெட் ,பேன்ட் அணிந்து வெளியே செல்லக் கூடாது.
  3. கெண்டகி மாகணத்தில் கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.
  4. மசாசு செட்ஸ் பகுதியில் உள்ள நாய்கள் அனைத்துக்கும் ஏப்ரல் மாதத்தில் பின்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
  5. மிச்சிகன் பகுதியில் பெண்ணின் தலை முடி கணவனுக்கு சொந்தம், எனவே கணவனின் சம்மதமின்றி முடி வெட்டி கொள்ளக்கூடாது.
  6. சால் வாடர் மாகாணத்தில் மது அருந்திவிட்டு கார் ஓடுபவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்படலாம்.
  7. புளோரிடா மாகாணத்தில் கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பாரசுடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது
  8. வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் ,கண்களை கட்டிக்கொண்டு ஓட்டுவது அலபாமா மாகாணத்தில் குற்றமாகும்.
  9. வெர்மான்ட் மாகாணத்தில் பெண்கள் பல்செட் அணிய கணவனின் அனுமதி பெற வேண்டும் .
  10. ஒகியோ மாகாணத்தில் ஆக்ஸ்போர்ட் நகரில் ஒரு பெண் ஆணின் படத்துக்கு எதிரே ஆடைகளை களைவது சட்டவிரோய்தமானது .
  11. நியூ ஜெர்சி மாகாணத்தில் 'கிராஸ் ஹில் ' பகுதியில் வசிக்கும் பூனைகளின் கழுத்தில் மூன்று மணிகள் கட்டியிருக்க வேண்டும்.(பறவைகள் தெரிந்து கொள்வதற்காக )
  12. அலக்சாண்டிரியா மாகாணத்தில் மின்ன சோடா பகுதியில் கணவனின் வாயில் துர்நாற்றம் வீசினால் ,மனைவியோடு உறவு கொள்ள முடியாது. வாயை சுத்தப்படுத்தி கொண்டு வரும்படி கணவன் மீது மனைவி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
  13. பெனிசில்வேனியா மாகாணத்தில் மனைவியின் எழுத்துபூர்வ ஒப்புதலின்றி மது வாங்க முடியாது.
  14. லிவர்பூல் மாகாணத்தில் பொது இடத்தில் பெண் மேலாடை இல்லாமல் இருப்பது சட்ட விரோதமானதாகும். ஆனால் மீன் அங்காடியில் உள்ள பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
  15. டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் சந்தித்தால் இரண்டும் நின்று, பிறகு புறப்பட்டு செல்லும் .
  16. பிரிட்டிஷ் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் லண்டன் துறைமுகத்தில் நுழையுமானால் 'டவர் ஒப் லண்டன் ' எனும் மாளிகையில் பணிபுரியும் காவலர்களுக்கு சட்டப்படி , ஒரு பீப்பாய் 'ரம்' மது வழங்க வேண்டும்.
  17. செஸ்டர் மாகாணத்தில் வேல்ஸ் நாட்டு மக்கள் சூரிய உதயத்திற்கு முன்னும் அஸ்தமனத்துக்கு பின்னும் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .
  18. இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இறப்பது சட்ட விரோதமானது.
  19. சனிக்கிழமைகளில் மூக்கை குடைவது இஸ்ரேல் நாட்டில் சட்ட விரோதமானது.
  20. கோழிகள் , வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் முட்டையிடுவது இஸ்ரேல் நாட்டில் சட்ட விரோதமானது.
  21. பிரிட்டிஷ் கடற்படையில் தட்டுப்படும் திமிங்கிலங்கள் சட்டப்படி அரசுக்கு சொந்தமானவை , அவற்றின் வால் ராணிக்கு சொந்தம்.
  22. இங்கிலாந்தில் மன்னர் பரம்பரையினரின் தபால் தலையை தலைகீழாக ஒட்டுவது இராஜத்துரோக குற்றத்துக்கு ஒப்பானதாகும்.
  23. பிரான்ஸ் நாட்டில் பன்றியை 'நெப்போலியன் ' என்று பெயர் வைத்து அழைப்பது சட்ட விரோதமானதாகும்.
  24. தாய்லாந்து நாட்டில் மக்கள் உள்ளாடை இல்லாமல் வெளியே செல்வது சட்ட விரோதமானதாகும்.
  25. டென்மார்க் நாட்டில் ஒரு புதுமையான சட்டம்,சிறையிலிருந்து தப்பி செல்வது சட்ட விரோதமானதல்ல ...ஆனால் பிடிபட்டால் எஞ்சிய கால தண்டனையை சிறையில் கழித்த பின் தான் விடுவிக்கப்படுவார்கள்.
  26. சுவிஸ்சர்லாந்து நாட்டில் அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் இரவு பத்து மணிக்கு மேல் , கழிப்பறையில் தண்ணீரை திறந்து சப்தம் ஏற்படுத்த கூடாது.

நன்றி : தேன்தமிழ்:::



This entry was posted on 10:34 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: