பெண்1 : இருந்தாலும் என் மருமகள் சரியான வயாடியா இருக்கா
பெண்2 : எப்படி சொல்ற
பெண்1 : பின்ன என்ன நான் சி..( C )போடினு சொன்னா அவ சி++..( C++ )போடினு சொல்றாள்னா பாரேன்..

மாணவன் 1: "நம்ம இங்கிலீஷ் வாத்தியார் கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு போறார்னு நினைகிறேன்"

மாணவன் 2: உனக்கு எப்படி தெரியும்.

மாணவன் 1: Come in னு சொல்றதற்கு பதிலா Log in னு சொல்லுறரே























தங்கைக்கு திருமணம்
புதிதாய் வாகனம்
பதவியில் உயர்வு
நினைத்த பெண்ணுடன்
திருமணம் அது இதுவென
எது நடப்பினும்
வாழ்த்துக்களுக்கு முன்னர் வந்து விடுகிறது

"எப்போ பார்ட்டி??"


ஆபீஸ் க்கு போகையிலே
பைக் கும் தான் மக்கர் (Hang)
ஆச்சுஒரு CTRL+ALT+DEL இல்லாமதான்
தடுமாறி போனேனுங்க !!!

பெரிய புத்தகம் ஒன்றில்
ஒரு குறிப்பை தேடுகையில்
CTRL + F இல்லாமல்
தடுமாறி போனேன் !!!

ரோடு ஓரமா போகையிலே
அழகு அழகா பெண்கள் தானே
இப்ப தானே பார்க்க நேரம் இல்ல
Add to favourites இல்லாம
தடுமாறி போனேனுங்க !!!

இங்கிலாந்து லெட்டர் (inland லேட்டர்) ங்கோ
எப்படி இருக்கும்னு மறந்து போச்சு !!!
ஒரு முறை தான் எழுதிடவே ரொம்ப ஆசை ஆச்சு !!!
யாருக்கு எழுதிடிவோம் ???
அப்பதானே தோனுச்சு,
கையில் இருப்பது எல்லாம்
மொபைல் நம்பரும், மெயில் idயும் தானே??
என்ன செய்வேன், என்ன செய்வேன்
எப்படியோ ஒரு வழியா நண்பனுக்கு எழுதியாச்சு
அப்பதானா இந்த மனசுக்கு தோனுச்சு
மத்த நண்பர்களுக்கு எப்படி CC இடுவது ???

பேருந்தில் குடும்பத்துடன் பயணம்
கண்டக்டர் கிட்ட 7 டிக்கெட் கேட்டேன்
500 ரூபாய் குடுத்தேன்
மீதியதான் சரி பாக்க
மொபைல் ம்தான் கால்குலேடர் ஆச்சு
என் மூளை என்னும் மெமரியே
ஒரு ராம் (RAM) ஆ மாறி போச்சு
சத்தியமா சொல்றேங்க,
மொபைல் மட்டும் இல்லையான
பாதி பேரு முட்டாளுங்க
சொந்த வீட்டு போன் நம்பர் கூட
பார்க்காம சொல்ல தெரியாது!!!



இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம்.

இனி?


--------------------------


"டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?"

"நீ எங்க வச்சியோ?"

மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க,

  • உன் சட்டை பை (உன்னோடது)
  • உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது)

இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும்.

--------------------------

உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது. கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீங்க. உடனே, கூகிள் மேப்ஸ் பக்கத்தில உலக வரைப்படத்துக்கு மேல புள்ளி புள்ளியா காட்டுது. எல்லாம், அதே பேருல உள்ள மக்கள்ஸ். நீங்க, ஒரு புள்ளிய கிளிக் பண்ணுணீங்கன்னா, அவரு இருக்குற எடத்து மேல போய் நிக்கும். நீங்க சந்தா செலுத்தி உறுப்பினர் ஆயிருந்தா, சேட்டிலைட் கூட கனெக்ட் பண்ணி, இடத்த ஆன்லைன்'ல காட்டும். உங்க ஃபிரண்ட் அவரோட அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்'ல "Share me" செலக்ட் பண்ணி இருந்தாருன்னா, அவரு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு அப்படியே பார்க்கலாம். மனச திட படுத்திட்டு பாருங்க. அவரு எந்த நிலையில வேணும்னாலும் இருப்பாரு.

--------------------------

உங்க ஃபிரண்ட கண்டு பிடிச்சிடிங்க. அடுத்தது அவன்/அவள் எப்படி இருக்காங்கன்னு தெரியனும். "Advance People Search" போங்க. பேர கொடுங்க. நம்ம மெயில், ப்லாக், நாம காப்பி பண்ணுன code, நம்ம நண்பர்கள், நம்ம புகைப்படங்கள்'ன்னு நம்ம பத்தின எக்கச்சக்கமான விவரங்கள் கூகிள் சர்வர்'ல இருக்கும். அத அப்படியே புரட்டி போட்டு, ஒரு அனலிசிஸ் பண்ணி,

  • இவர் நேத்து இந்த படத்த இந்த தியேட்டர்ல பார்த்தார்.
  • இவர் இங்கே சரக்கடித்தார்.
  • இப்படி இருந்த இவர் ஆகிட்டார் (புகைப்பட சான்றுகளுடன்).
  • இவர் இந்த இந்த கம்பெனி'யில் இருந்து இந்திந்த தேதிகளில் துரத்தியடிக்கப்பட்டார்.

இப்படி அஞ்சாறு பக்கத்துக்கு தகவல் கொடுக்கும். இந்திய கண்ட மக்களுக்காக, ஜாதகமும் ஜெனரேட் செய்து கொடுக்கப்படும்.

வீட்டில் ரேசன் கடை கியுவில் நிற்க மாட்டேன் என்று சண்டை போட்டு விட்டு, யாருக்கு தெரியாமல் பலான பட தியேட்டர் கியுவில் நின்றதை, யூடூபில் கண்டு களிக்கலாம்.

--------------------------

திரைப்பட பிரியர்களுக்காக, Search Movies ஆப்சனில் ஒரு கதையையோ, வசனத்தையோ கொடுத்தால், அது சம்பந்தப்பட்ட படங்கள் வரும். படங்களையும் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு, கடைசியா வந்த ஒரு ரஜினி படத்து கதைய கொஞ்சம் கொடுத்தா, அவர் நடிச்ச இருபது முப்பது படங்களும், நாலஞ்சு மலையாள படங்களும், இரண்டு மூணு கன்னட படங்களும் வரும்.

ஏதாவது ஒரு கமல் பட கதைய கொடுத்தா, அதோட ஒரிஜினல் ஆங்கில, ஜெர்மனிய படங்களோட தொகுப்புகள் வரும்.



அப்புறம், டவுசர்'ன்னு கொடுத்தா ராமராஜன் படங்களும், பாகிஸ்தான் தீவிரவாதின்னு கொடுத்தா விஜயகாந்த் படங்களும், தமிழ் வார்த்தைகளை தப்பு தப்பா இழுத்து கொடுத்தா அஜித் படங்களும், ரன்னுன்னு கொடுத்தா மாதவன் படமும், நாட் ரன்னுன்னு கொடுத்தா பிரசாந்த், ஷாம், ஸ்ரீகாந்த் படங்களும், காமெடி ஆக்க்ஷன் படம்னு கொடுத்தா ஜே.கே.ரீத்திஸ் படங்களும் வரும்.

அப்புறம், கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்து இப்படி ஆகிராதிங்க