இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம்.

இனி?


--------------------------


"டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?"

"நீ எங்க வச்சியோ?"

மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க,

  • உன் சட்டை பை (உன்னோடது)
  • உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது)

இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும்.

--------------------------

உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது. கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீங்க. உடனே, கூகிள் மேப்ஸ் பக்கத்தில உலக வரைப்படத்துக்கு மேல புள்ளி புள்ளியா காட்டுது. எல்லாம், அதே பேருல உள்ள மக்கள்ஸ். நீங்க, ஒரு புள்ளிய கிளிக் பண்ணுணீங்கன்னா, அவரு இருக்குற எடத்து மேல போய் நிக்கும். நீங்க சந்தா செலுத்தி உறுப்பினர் ஆயிருந்தா, சேட்டிலைட் கூட கனெக்ட் பண்ணி, இடத்த ஆன்லைன்'ல காட்டும். உங்க ஃபிரண்ட் அவரோட அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்'ல "Share me" செலக்ட் பண்ணி இருந்தாருன்னா, அவரு என்ன பண்ணிட்டு இருக்காருன்னு அப்படியே பார்க்கலாம். மனச திட படுத்திட்டு பாருங்க. அவரு எந்த நிலையில வேணும்னாலும் இருப்பாரு.

--------------------------

உங்க ஃபிரண்ட கண்டு பிடிச்சிடிங்க. அடுத்தது அவன்/அவள் எப்படி இருக்காங்கன்னு தெரியனும். "Advance People Search" போங்க. பேர கொடுங்க. நம்ம மெயில், ப்லாக், நாம காப்பி பண்ணுன code, நம்ம நண்பர்கள், நம்ம புகைப்படங்கள்'ன்னு நம்ம பத்தின எக்கச்சக்கமான விவரங்கள் கூகிள் சர்வர்'ல இருக்கும். அத அப்படியே புரட்டி போட்டு, ஒரு அனலிசிஸ் பண்ணி,

  • இவர் நேத்து இந்த படத்த இந்த தியேட்டர்ல பார்த்தார்.
  • இவர் இங்கே சரக்கடித்தார்.
  • இப்படி இருந்த இவர் ஆகிட்டார் (புகைப்பட சான்றுகளுடன்).
  • இவர் இந்த இந்த கம்பெனி'யில் இருந்து இந்திந்த தேதிகளில் துரத்தியடிக்கப்பட்டார்.

இப்படி அஞ்சாறு பக்கத்துக்கு தகவல் கொடுக்கும். இந்திய கண்ட மக்களுக்காக, ஜாதகமும் ஜெனரேட் செய்து கொடுக்கப்படும்.

வீட்டில் ரேசன் கடை கியுவில் நிற்க மாட்டேன் என்று சண்டை போட்டு விட்டு, யாருக்கு தெரியாமல் பலான பட தியேட்டர் கியுவில் நின்றதை, யூடூபில் கண்டு களிக்கலாம்.

--------------------------

திரைப்பட பிரியர்களுக்காக, Search Movies ஆப்சனில் ஒரு கதையையோ, வசனத்தையோ கொடுத்தால், அது சம்பந்தப்பட்ட படங்கள் வரும். படங்களையும் பார்க்கலாம்.

உதாரணத்துக்கு, கடைசியா வந்த ஒரு ரஜினி படத்து கதைய கொஞ்சம் கொடுத்தா, அவர் நடிச்ச இருபது முப்பது படங்களும், நாலஞ்சு மலையாள படங்களும், இரண்டு மூணு கன்னட படங்களும் வரும்.

ஏதாவது ஒரு கமல் பட கதைய கொடுத்தா, அதோட ஒரிஜினல் ஆங்கில, ஜெர்மனிய படங்களோட தொகுப்புகள் வரும்.



அப்புறம், டவுசர்'ன்னு கொடுத்தா ராமராஜன் படங்களும், பாகிஸ்தான் தீவிரவாதின்னு கொடுத்தா விஜயகாந்த் படங்களும், தமிழ் வார்த்தைகளை தப்பு தப்பா இழுத்து கொடுத்தா அஜித் படங்களும், ரன்னுன்னு கொடுத்தா மாதவன் படமும், நாட் ரன்னுன்னு கொடுத்தா பிரசாந்த், ஷாம், ஸ்ரீகாந்த் படங்களும், காமெடி ஆக்க்ஷன் படம்னு கொடுத்தா ஜே.கே.ரீத்திஸ் படங்களும் வரும்.

அப்புறம், கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்து இப்படி ஆகிராதிங்க







This entry was posted on 20:49 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

    இனியாள் said...

    Humerous, semayya sirippu vanthathu padikkum pothu, yaar kanda, kandippa nadakkalam neenga sonnathellam nadantha ungala ninaichukiren balu. Vazhthukkal.

  1. ... on Tuesday, October 14, 2008 10:34:00 am  
  2. Magic Balu said...

    Thanks indu

  3. ... on Tuesday, October 14, 2008 10:39:00 am  
  4. அழகான ராட்சசி said...

    அனுபவம் பேசுது.ரொம்ப நகைசுவையாகவும்,சிந்திக்கும் திறனுடனும் உள்ளது.யாரும் கூகில் இருக்ககூடாது.............
    ரொம்ப கஷ்டம்

  5. ... on Wednesday, October 15, 2008 7:57:00 am