ஆபீஸ் க்கு போகையிலே
பைக் கும் தான் மக்கர் (Hang)
ஆச்சுஒரு CTRL+ALT+DEL இல்லாமதான்
தடுமாறி போனேனுங்க !!!

பெரிய புத்தகம் ஒன்றில்
ஒரு குறிப்பை தேடுகையில்
CTRL + F இல்லாமல்
தடுமாறி போனேன் !!!

ரோடு ஓரமா போகையிலே
அழகு அழகா பெண்கள் தானே
இப்ப தானே பார்க்க நேரம் இல்ல
Add to favourites இல்லாம
தடுமாறி போனேனுங்க !!!

இங்கிலாந்து லெட்டர் (inland லேட்டர்) ங்கோ
எப்படி இருக்கும்னு மறந்து போச்சு !!!
ஒரு முறை தான் எழுதிடவே ரொம்ப ஆசை ஆச்சு !!!
யாருக்கு எழுதிடிவோம் ???
அப்பதானே தோனுச்சு,
கையில் இருப்பது எல்லாம்
மொபைல் நம்பரும், மெயில் idயும் தானே??
என்ன செய்வேன், என்ன செய்வேன்
எப்படியோ ஒரு வழியா நண்பனுக்கு எழுதியாச்சு
அப்பதானா இந்த மனசுக்கு தோனுச்சு
மத்த நண்பர்களுக்கு எப்படி CC இடுவது ???

பேருந்தில் குடும்பத்துடன் பயணம்
கண்டக்டர் கிட்ட 7 டிக்கெட் கேட்டேன்
500 ரூபாய் குடுத்தேன்
மீதியதான் சரி பாக்க
மொபைல் ம்தான் கால்குலேடர் ஆச்சு
என் மூளை என்னும் மெமரியே
ஒரு ராம் (RAM) ஆ மாறி போச்சு
சத்தியமா சொல்றேங்க,
மொபைல் மட்டும் இல்லையான
பாதி பேரு முட்டாளுங்க
சொந்த வீட்டு போன் நம்பர் கூட
பார்க்காம சொல்ல தெரியாது!!!



This entry was posted on 11:06 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

    அழகான ராட்சசி said...

    சரியாக சொன்னீர்கள்.உங்களுக்கு கணிணியின் மீது மிகுந்த பற்றோ?
    ஒரே கணிணி மயமாக இருந்தது,ரொம்ப நன்றாக உள்ளது,உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்,

  1. ... on Wednesday, October 15, 2008 7:52:00 am  
  2. Magic Balu said...

    thanks ya

  3. ... on Wednesday, October 15, 2008 9:46:00 am