என்னை தான் அம்மா
அடிப்பாள்....
ஏனோ
அவள் முகத்தில்
வலி தெரியும்.....!
கடைசியில்
நிச்சயம் முத்தம்
கிடைக்கும்.,
ஏனோ
இன்னோரு தரம் அடிக்க மாட்டாளா- என்று
மனசு ஏங்கும்.....
ஒவ்வொரு பிறந்தநாளும்
அம்மாவின்
இனிப்போடு தான்
பிறக்கும்....
கடைசிவரை கேட்கவே இல்லை
அம்மாவின் பிறந்த நாளை.....!
2 comments:
Rajarajan said...
மனிதனுக்கு ஒரு கேள்வி மரத்திடம் இருந்து....
"நாங்கள் 2000 ஆண்டுகளாக எத்தனை லட்சம் சிலுவைகளை தந்திருக்கிறோம்......
ஆனால், உங்களால் ஏன் ஒரு இயேசு கிறிஸ்துவை கூட தர முடியவில்லை?"
தாய் என்பவள் யேசுவைப்போல
பிள்ளைகள் பெரும்பாலும் மரங்களைப்போல
சிலுவைகள் சுமந்தாலும் யேசு மரஙகளை சபித்ததில்லை நம் அன்னையர் போல.
சரி பாலு எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி
பாசம் என்றவுடன் தாயை பற்றி எழுதும் நிறைய பேருக்கு தந்தையரின் பாசம் தெரியாதா?
ரொம்ப நாள் கேள்வி இது முடிந்தால் பதிலளிக்கவும்
Muthu Kumar N said...
நண்பரே,
தந்தையின் பாசம் கண்டிப்பு மிக்கது, தவறு செய்தால் அதைத்தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் மாட்டினால் தண்டனை நிச்சயம், தாயின் பாசம் நேசம் மிக்கது, தவறு செய்தாலும் அத்தவற்றை உணராமல் செய்தால் உணர்த்த முற்படுவாள், உணர்ந்து செய்தால் அன்பால் திருத்த விருப்பப்படுவாள், ஆனால் தந்தையோ தன் பிள்ளை அந்தத் தவற்றை மறுபடி செய்யாமல் இருக்க ஆன மட்டும் என்ன கடுமையான முறை இருக்கிறதோ அவனிடத்தில் அதைப்பின்பற்றுவான், எனென்றால் அவன் பிள்ளை வெறொருவர் கையால் தண்டனை பெறுவதை எந்தத் தந்தையும் பார்க்கச் சகியான் என்பதானால் என்று எண்ணத்தில் தோன்றியதை இந்த மன்றத்தில் உறைக்கிறேன்...
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்