பதினாரு வயதிலேயே
எமன்
என் கதையை முடித்து விட்டான்!!!

இறப்பை
எதிர்த்து என்னுடைய
போராட்டங்கள்
தோல்வியின் திசை நோக்கி
இழுத்து செல்லப்படுகின்றன!!

இறுதியாக ஒருயொருமுரை
இழுத்து சுவாசித்தேன்!!

அந்த இரவில்
உறவினர்களோடு
உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே
உயிர்போனது
உடல் தனித்து விடப்பட்டது!!

நான் லேசானேன்
காற்றாய் உலாவினேன்!!

எனக்குப் புரிந்து விட்டது
நான்
இறந்து விட்டேன் என்று!

முதன் முதலில்
என்னுடலைப் பார்த்து
'ஓ' வென அழுதது
நான்தான்!

என்
கண்ணீர் மழையின்
கடைசிச் சொட்டும்
விடிவதற்குள் விழுந்து விட்டது
எதனையும் நனைக்காமல்!

என்
குடும்பத்திற்கு
இன்றைய விடியல்
சூரியனில்லாமல்!

நான்
உறங்கிக் கொண்டிருக்கின்றேன்
என்று வழக்கம்போல
அம்மா தன் வேலைகளைச்
செய்யத் துவங்கிவிட்டாள்!


என் முகத்தில்
தண்ணீர் தெளித்துவிட்டு
நான் அடிப்பேன் என்று
வேகமாய் ஓடுகிறாள் என் தங்கை!

ஐயோ!!
நான் என் உடலில்
இல்லையென்று யார்
கண்டுபிடிக்கபோகிறார்கள்??

எனக்குத்
துக்கம் என்
தொண்டையை அல்ல
என்னையே அடைத்துவிட்டது!

எப்பொழுதும் போல
என்னைத் திட்டிக் கொண்டே
அலுவலகத்திற்கு
புறப்பட்டுக் கொண்டிருந்த
என் மாமா
தங்கையிடம் சொல்கிறார்,
"பாரும்மா பாரு!
நான் நாய் மாதிரி
கத்திக்குட்டு இருக்கேன்
ஒன்றுமே கேட்காத மாதிரி
பிணம் போலத் தூங்கிட்டு இருக்கான்"!!

எனக்கு
என்ன சொல்வது
என் மூச்சு என்னிடம் இல்லை!


அம்மா, மாமா
உண்மையிலேயே நான்
பிணமாகவே கிடக்கிறேன்!

'பிணம்' என்றது
என் தங்கையின்
ஆறாம் அறிவைத் தூண்டியது??

ஓடி வந்தால்! உற்று நோக்கினாள்
உடலை ஒரு கணம்
அது அசைவற்றுக் கிடந்தது!!

ஈக்கள்
இமைகளை மொய்ப்பதைக் கண்டு
இடிந்து விழுந்தாள்
அண்ணா என்று
அலறியபடியே!

தன் மார்பிலும் வயிற்றிலும்
அடித்துக்கொண்டு - என் அம்மா
விழுந்து விழுந்து அழுகிறாள்!


தங்கையோ அறிவியல்
அறிந்தவள் - அதனால் தான்
என் இதயத்தில்
கைவைத்து குத்தலானாள்!

பாவம்
அவள் முயற்சி
பிணத்திடம் எப்படிப் பலிக்கும்!

ஓடோடி வந்த என் மாமா
உடலைதன் மார்போடு
சேர்த்து வைத்து
'ஓ' வெனக் கதறியழுதார்!


உயிரோடு நானிருக்கையில்
வார்த்தையால் சுட்டவர் - இன்று
என் உடலுக்குக் கண்ணீர்
ஒத்தடம் கொடுக்கிறார்!

வீட்டின் சுவர்கள் எல்லாம்
மௌனமாய் நின்றபடி
மரண அஞ்சலி செய்கின்றன!

உயிரோடு நான் எழுந்து
ஓர் இன்ப அதிர்ச்சி
தர வேண்டும் என எண்ணுகிறேன்!

என்
முயற்சிகள் தோல்வியடைய வில்லை
நானே தோற்றுப்போனேன்!


அக்கம் பக்கத்தார்
அலறல் கேட்டு
வந்துவிட்டார்கள்!

என் சாவுமணியைத் தெரியப்படுத்த
தூரத்து உறவினர்களுக்கெல்லாம்
தொலைப்பேசி மணி
துக்கத்தில் அலறியது!


தாயின் புலம்பல்!
மாமாவின் மருகல்!
தங்கையின் தேம்பல்!

என் மீது இவ்வளவு பற்றா?
என் இதயத்திற்கு குளிங்கி அழத்திராநியில்லை!


காற்றை இருந்தவன்
கனத்துப் போனேன்!


சின்னவயதில் ஏறிவிளையாடிய
அதே கட்டில்
ஏன் உடலைக் கிடத்தினர்!

உறவினர்கள் ஒவ்வொருவராய்க்
கடமைக்காக
வந்து கொண்டிருந்தார்கள்!

பலருக்கு என் மரணம்
விடுப்பு எடுக்க
வசதி செய்து கொடுத்தது!

நான் நீரூற்றி
வளர்த்த தென்னையிலிருந்து
தயாராகிக் கொண்டிருந்தது
எனக்கான பாடை!

நண்பர்களுக்கு
செய்திபரவியது!
காற்றைத் திரண்டு வந்தனர்!

இறந்துபோன
ஏன் உடலில்
இறந்துகொண்டிருக்கும் பூக்கள்!

ஒரு
ஆண் மலர்களால்அலங்கரிகப்படுவது
இரண்டு முறை தான்!

ஒன்று திருமணம்,
ஒன்று மரணம்!

எனக்கு இரண்டாம் முறையே
முதல் முறை ஆயற்று!

சின்ன சின்ன குழந்தைகள்
எல்லாம் சோகமின்றி
விளையாடிக்கொண்டிருந்தன!

அவர்கள் அறிந்திருந்தனர் போலும்
பிறப்பைப் போல
இறப்பும் இயல்பு தானென்று!


This entry was posted on 21:44 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

  புதியவன் said...

  //ஒரு
  ஆண் மலர்களால்அலங்கரிகப்படுவது
  இரண்டு முறை தான்!

  ஒன்று திருமணம்,
  ஒன்று மரணம்!

  எனக்கு இரண்டாம் முறையே
  முதல் முறை ஆயற்று!//

  உணர்வுப் பூர்வமான வரிகள். கவிதை மிக நன்று மேஜிக் பாலு.

 1. ... on Friday, November 21, 2008 8:12:00 am  
 2. Iniyal said...

  Nalla concept balu vazhtukkal. Romba neelama irukke maranam.

 3. ... on Friday, November 21, 2008 10:16:00 am  
 4. Anonymous said...

  Very Nice ellame very cute keep it up................. nalla irukkunu oru varthayala sollida mudiyathu avlo super a irukku ellame, u select that pic and all

 5. ... on Wednesday, November 26, 2008 4:17:00 pm  
 6. GRS said...

  அருமையான வரிகள்...
  உணர்வுப் பூர்வமானது.சிறிது நேரம் மீள முடியவில்லை..

 7. ... on Sunday, November 30, 2008 2:30:00 pm  
 8. uma said...

  மரணம்..... ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மரணத்தை பற்றி தெரிந்தால் என்னவெல்லாம் துயர படுவான் என்பதற்கு தங்கள் கவிதை ஒரு உருக்குமான பொருள் தருகிறது .......

  ** நான் நீரூற்றி
  வளர்த்த தென்னையிலிருந்து
  தயாராகிக் கொண்டிருந்தது
  எனக்கான பாடை! ** - இந்த வரிகள் மனதை மிகவும் கனக்கிறது

 9. ... on Friday, February 06, 2009 3:39:00 pm  
 10. Anonymous said...

  எல்லோரும் யோசித்து பார்க்கவேண்டிய ஒன்று

 11. ... on Wednesday, April 03, 2013 3:33:00 pm