செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்

"This is not the valid no. please check the no. u have dialled."

இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..

நெல்லைத் தமிழ்
ஏல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல.

கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி.....

கோவைத் தமிழ்
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!

யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே

சென்னை தமிழ்
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்

பாலக்காடு தமிழ்
யேய்... நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?

வட ஆற்காடு தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு...

அப்புறம் நீங்க உங்க தமிழில் சொன்னா எப்பயிருக்கும்னு மண்வாசனை மாறாம சொல்லுங்க:

இப்ப உங்க தமிழில் ஆரம்பியுங்க மக்களே...








This entry was posted on 10:33 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

    நாகராஜன் said...

    பாலக்காட்டு தமிழ் மட்டும் எழுத்தில் கொண்டு வர இயலாத இனிமை என்பதால் சரியாக வரவில்லை.மற்றவை எல்லாம் அருமை.

  1. ... on Friday, November 07, 2008 8:03:00 pm  
  2. இனியாள் said...

    Nalla sinthanai..... innum niraiya eluthunga... vazhthukkal.

  3. ... on Saturday, November 08, 2008 10:56:00 am  
  4. ம.தி.சுதா said...

    அட யாழ்ப்பாணத்திலயும் இருக்கா...

  5. ... on Wednesday, January 12, 2011 7:16:00 am