உங்கள் எல்லோருக்கும் ஏமாந்த காகம் கதை தெரியும் இல்லையா? "காக்கா காக்கா, ஒரு பாட்டுப் பாடு என்று தந்திரமான குள்ளநரி கேட்க, கவனமில்லாமல் வாயில் வடை இருப்பது தெரியாமல் அசட்டுக் காகம் வாயைத் திறந்து பாட, வடையும் கீழே விழுந்து விட, நரியும் ஏமாற்றி வடையைப் பெற்றது இல்லையா? இப்போது இந்த சாதுர்யமாகத் தன் மூளையை உபயோகித்த காகத்தின் கதையைப் பார்ப்போமா?


அம்மாக் காகம் அழைத்தது,காக்கா கா,,, கா,,,, கா,,,,

பறந்து வந்தது குழந்தைக் காகம் கரைந்தது கா,,,, கா,,,, கா,,,,,,,

அம்மா சொல்லியது அன்புடன்,

எமாற்றாதே நீ ஒருவரையும்,

ஏமாறாதே, இரு கவனமுடன்,

நீ செய்யும் வேலை எல்லாம்

புத்திக் கூர்மையுடன் இருக்கட்டும் காகா,,,,, காக்கா,,,,,, கா,,,,,,,,

சரியம்மா.

"மகிழ்ந்து போனது குஞ்சுக் காக்கை

ஒரு தின் பண்டக் கடை மேல் பறந்தது

கடையுடன் வடையையும் பார்த்தது

வடை வாங்க ஒரு பையன் வந்தான்

கையில் வாங்கி வடையைப் பார்த்தான்

வடை தவறிக் கீழே விழவும்

குஞ்சுக் காக்கா கொத்திப் பறந்தது

மேலே மரத்தின் கிளையில் அமர

எல்லாம் ரசித்த நரி ஒன்று வர

வடையை அடைய முயன்றது.

காக்கா காக்கா, கீழே பார்

நீ அழகாய்ப் பாட்டுப் பாடுவாயே,

ஒன்று பாடிக் காட்டுவாயா?

""ஓ, பாடுவேனே" என்றபடி

வாயின் வடையைக் காலில் சொறுகி

கா,,, கா,," என்றும் பாட

நரியும் ஏமாந்து திரும்பியது,,,,,,


This entry was posted on 12:04 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

    பிரியமான தோழி said...

    Ithu pazhaya kathai........
    nothing special with this balu

  1. ... on Thursday, November 27, 2008 2:59:00 pm