அலைபேசியில் பேசுவதற்கும் சில இங்கிதங்கள் இருக்கின்றன.

நேரில் பார்த்துப் பேசும் பழக்கம் குறைந்துபோய் தொலைபேசியிலேயே முக்கியமான, முக்கியமில்லாத பல விஷயங்களைப் பேசி முடித்துக்கொள்ளும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் நம்மில் பலருக்குத் தொலைபேசியைப் பயன்படுத்துவது பற்றியோஅதில் பேசுவது பற்றியோ அடிப்படையாக சில விஷயங்கள் தெரியவில்லை.

நம்மில் பெரும்பாலானவர்கள் நேரில் பேசுவது போலவே தொலைபேசியிலும் பேசுகிறோம்;அல்லது தொலைபேசியில் முகம் தெரியாது என்கிற தைரியத்தில் வேறு மாதிரி அணுகுமுறையுடன் பேசுகிறோம். தொலைபேசிக்கென்று சில அடிப்படையான தன்மைகளும் அதில் பேசுவதற்கென்று சில அடிப்படையான விஷயங்களும் இருக்கின்றன.

நாம் தொலைபேசியில் பல வகை மனிதர்களுடன் பேசுகிறோம். எல்லோருடனும் பேசும்போது அடிப்படையில் ஒரு விஷயத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொலைபேசியை இயக்கி ‘ஹலோ’ சொல்லும்போது ஒரு புன்னகையுடன் சொல்லுங்கள். நீங்கள் புன்னகைப்பது எதிரில் உங்களுடன் உரையாடுபவர்களுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையுடனேயே செய்யுங்கள் அவர்களுக்கு நிச்சயம் தெரியும் என்று என் அனுபவத்தில் தெரிந்த உண்மை. சில சமயங்களில் மன அழுத்தம் காரணமாக நான் புன்னகைக்காமல் ‘ஹலோ’ சொன்னால் எனது பல நண்பர்கள் எளிதாக கண்டுபிடித்துவிடுகிறார்கள். ‘என்ன டல்லா இருக்கீங்க’ என்ற கேள்வி வரும். யாருக்குத் தெரியும், உங்கள் புன்னகை, மன அழுத்தத்தில் இருக்கும் யாரையாவது உற்சாகப்படுத்தலாம்.

தொலைபேசியில் நீங்கள் அழைத்துப் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய இரண்டாவது அடிப்படையான விஷயம், எதிரில் இருப்பவர் உங்களுடன் பேசும் நிலையில் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்வது. அது உங்கள் அலுவலக மேலதிகாரியாக இருந்தாலும் சரி, உங்கள் நண்பராக இருந்தாலும் சரி.

உங்கள் நண்பராக இருப்பதாலேயே அவர் எந்த நேரமும் உங்களுடன் அரட்டை அடிக்கத் தயாராக இருப்பார் என்று நினைத்துவிடாதீர்கள். அதனால் எப்போதுமே ‘ஹலோ’விற்குப் பிறகு ‘பிஸியாக இருக்கிறீர்களா, இப்போது பேசலாமா’ என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக, ஒரு அழைப்பில் இருக்கும்போது வேறு வேலை செய்வதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இரண்டு விஷயங்களிலுமே உங்கள் கவனம் சிதற வாய்ப்புண்டு. அப்படியே அவசியம் வேறு வேலை செய்யும் நிலை இருந்தால் தொலைபேசி அழைப்பை கட் செய்துவிடுங்கள். உங்கள் வேலை முடிந்த பிறகு மீண்டும் அழைத்துக் கொள்ளலாம்.


செல்லில் பேசும்போது கத்திப் பேசுவதையும் உரக்கச் சிரிப்பதையும் முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள். அது உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் உங்கள் நம்பகத் தன்மையைக் குறைத்துவிடும்.
அலுவலக மேலதிகாரியுடன் பேசும்போது பதற்றத்தைக் காட்டாதீர்கள், அடிக்கொரு முறைசார் / மேடம் என்று கூப்பிடுவதைத் தவிருங்கள். அது உங்களைத் தன்னம்பிக்கையற்றவராகக் காட்டக் கூடும்.


தொலைபேசியில் கோபப்பட்டோ கடிந்தோ பேசாதீர்கள். நீங்கள் நேருக்கு நேராகப் பேசுவதைவிடத் தொலைபேசியில் கோபமாகப் பேசும்போது அது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் முகம் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.


நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரி தவிர நமக்குப் பல விதமான அழைப்புகள் வரக் கூடும். க்ரெடிட் கார்டு எடுக்கச் சொல்லி, லோனுக்கு அப்ளை பண்ணச் சொல்லிப் பல டெலிமார்க்கெட்டிங் நபர்கள் நமக்குத் தொலைபேசியிலேயே தொந்தரவு தரக்கூடும். உங்கள் மறுப்பையோ இயலாமையையோ சின்ன புன்னகையுடனேயோ சொல்லுங்கள். எரிந்து விழுவதால் உங்களுக்கு மட்டுமல்ல அவர்களும் மூடு கெட்டுப் போகும்.


குடும்ப நிலை காரணமாகவோ அவர்களுடைய பின்னணி காரணமாகவோ 1000க்கோ 2000க்கோ அப்படிஒரு வேலையில் சேர்ந்து ஒரு நாளைக்கு பலருடைய கோபதாபங்களையும் சேர்த்து சம்பாதிக்கும் அவர்களிடம் நாமாவது கொஞ்சம் இனிமையாக நடந்துகொள்வோமே!


அப்புறம் உங்கள் செல்போனின் ஒலியளவு (வால்யும்). சிலருக்கு செல்லில் அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ். வந்தால் ரிங் டோன் இருபது மீட்டருக்குக் கேட்கிறது. இவ்வளவு சத்தம் தேவைதானா? நாமும் சத்தம் போடக் கூடாது, நம்முடைய செல்போனும் சத்தம் போடக் கூடாது.


இத்தனை இங்கிதங்களையும் பின்பற்றினால் மற்றவர்கள் மத்தியில் நமக்கு நல்ல இமேஜ் இருக்கும். அதோடு நமக்கு போன் வந்தால் யாரும் கடுப்பாக மாட்டார்கள்!



This entry was posted on 10:28 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

    இனியாள் said...

    Nalal vishayam sollirukke balu, vazhthukkal. Pinpatra vendiavai.

  1. ... on Thursday, November 06, 2008 4:12:00 pm  
  2. Dhana said...

    Very useful. I am already following some of these. Now, I'll try to follow all of them :)

  3. ... on Thursday, November 06, 2008 4:18:00 pm  
  4. பிரியமான தோழி said...

    hai
    very good article.
    super.



    hereafter i will think about it.

  5. ... on Thursday, November 06, 2008 4:18:00 pm  
  6. Unknown said...

    Sir

    It was really useful for me to evaluate me whether im such person who will have a good image within others.

    Super...

    Ungal narpani thodarattum....

  7. ... on Friday, November 07, 2008 12:15:00 am  
  8. Anonymous said...

    நிறைகளை மட்டும் பேசும்
    காதலர்களைப் போல் இல்லமால்
    குறைகளைப் பகிர்ந்துக் கொள்ளும்
    நண்பர்களாய் இருப்போம்!

    உன்
    குறைகளையெல்லாம்
    ஒன்றுவிடாமல் கூறு

    நட்பு
    காதலைவிட கண்ணியமானது!
    உயிரின்
    உயிர்ப்பு நிலையது!

  9. ... on Saturday, July 04, 2009 5:36:00 pm  
  10. Anonymous said...

    ShalineyVijay:
    Good one thanks to present it :)Many people don't know how to talk in mobiles and how to carry out it. Many times I was irritated by those people behaviour. This article may be help full for them.

  11. ... on Saturday, June 26, 2010 3:03:00 pm  
  12. Magic Balu said...

    thanks shalini

  13. ... on Saturday, June 26, 2010 5:01:00 pm