மேஜிக்கின் தந்தையென்று அழைக்கப்படும் மறைந்த பி.சி. சர்கார் அவர்களுக்கு சமர்ப்பணம்!!!மேஜிக் என்றால் என்ன???மேஜிக் ஒரு உயர்தரமான பொழுது போக்குக் கலை. ஒருவர் மனமும் புண் படாமல், தீமை ஏற்படாமல், துரோகம் செய்யாமல், ஏமாற்றி பொருள் பறிக்காமல் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு உன்னத கலை மேஜிக்.

யாரெல்லாம் மேஜிக் பயிலலாம்???
மேஜிக்க்கில் ஆர்வம் உள்ள அனைவரும் (வெறும் ரகசியங்களை மற்றும் தெரிந்து கொள்ள அல்ல) !!!!

எப்படி ஒரு மேஜிக் நிபுணர் ஆவது ??

 1. மேஜிக் என்றால் என்ன என்று முதலில் புரிந்து (understanding) வேண்டும்.
 2. பின்பு எந்த ஒரு கலையைப் போன்று முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 3. அதன் பிறகு, எல்லாம் உங்கள் பயிற்சி, பயிற்சி, பயிற்சி தான்.

மேஜிக் நிபுணராக என்ன தேவை??
 1. திடமான தன்னம்பிக்கையும், மன உறுதியும் அவசியம்.

 2. சஞ்சலப் புத்தி இருக்கக் கூடாது.

 3. அழகாகவும், கவர்ச்சியாகவும் பேச தெரிந்து இருக்க வேண்டும்.
 4. கண்களை விட கைகள் மிக வேகமாக செயல் பட வேண்டும்.

 5. சபைக் கூச்சம் கூடவே கூடாது.

 6. நல்ல ஞாபக சக்தி வேண்டும்.


மேஜிக் கற்பதால் என்ன பயன்??

நீங்கள் உண்மையிலேயே மேஜிக்கில் ஆர்வம் கொண்டிருந்தால்,


 1. மேலே கூறிய 6 குணங்களும் தானாகவே வந்து விடும்.

 2. உங்கள் personality மெருகேரும்.

 3. உங்கள் communication skills மெருகேரும்.

இனி மேஜிக் கற்கலாம்!!!


அதற்கு முன் முக்கியமா சில விதிகள்: 1. மேஜிக்கின் ரகசியங்களை மேஜிக்கில் உண்மையான ஆர்வம் இல்லாத யாருடனும் பகிர கூடாது.

 2. ஒரே மேஜிக்கை ஒரே ரசிகர்களுக்கு செய்து காட்ட கூடாது (In Magic, there is no ONCE MORE always ONE MORE)

 3. நீங்கள் செய்ய போகும் மேஜிக்கின் முடிவை முன்பே சொல்கூடாது, அது மேஜிக்கின் சுவாரசியத்தைக் குறைத்து விடும்.

 4. ஒரு மேஜிக்கை செய்து கட்டும் முன் பல தடவை நன்றாக பயிற்சி செய்ய வேண்டும்.

எல்லாக் கலைகளைப் போல மேஜிக்கும் ஒரு எல்லை கிடையாது. கலையைக் கற்றவர்கள் கற்பனைக்கும், திறமைக்கும் ஏற்ப புதுப் புது மேஜிக்குகளை உருவாக்கிக் கலை அபிவிருத்தி அடைய உதவி செய்யலாம். அது அவருக்கும் கலைக்கும் பெருமை சேர்க்கும்.

தொடரும்......


This entry was posted on 19:17 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

  புதியவன் said...

  எனக்கு சின்ன வயசில இருந்தே மேஜிக் கற்றுக் கொள்ள ஆசை. அப்பவெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும் இப்பவும் தான். சில சின்னச்சின்ன மேஜிக்கையும் கற்றுக் கொண்டேன் அவையெல்லாம் Close-Up மேஜிக்கள் தான். Street மேஜிக் Stage மேஜிக் எல்லாம் கற்றுக் கொள்ள ஆசை தான் ஆனா அதெல்லாம் நேரில் தான் கற்றுக்கொள்ள முடியும் இல்லையா ?
  நாம மேஜிக் செய்யும் போது பார்க்கிறவங்க முகத்தில வருகிற ஆச்சர்யத்தை பார்க்கிறது தான். நாம் கற்றுக் கொண்ட கலைக்குக் கிடைகும் மிகப் பெரிய பரிசு சரிதானா மேஜிக் பாலு ?

 1. ... on Wednesday, November 12, 2008 8:52:00 am  
 2. Magic Balu said...

  மிகவும் சரியே..
  உங்கள் மேஜிக் ஆர்வத்திற்கு நன்றி

 3. ... on Wednesday, November 12, 2008 10:26:00 am  
 4. தியாகராஜன் said...

  மேஜிக்கின் ரகசியங்களை மேஜிக்கில் உண்மையான ஆர்வம் இல்லாத யாருடனும் பகிர கூடாது.///

  வணக்கம்.
  தாங்கள் எம்மோடு பகிர்ந்திடலாம்.
  ஆர்வத்துடனிருக்கிறோம்.

 5. ... on Monday, November 17, 2008 3:50:00 pm  
 6. banu said...

  Balu me too have interest to learn magic?
  will u help me?

 7. ... on Thursday, November 27, 2008 5:35:00 pm  
 8. Anonymous said...

  மேஜிக்கை கற்க என்ன செய்வது எப்படி உங்களை அனுகுவது

 9. ... on Friday, April 19, 2013 9:39:00 pm  
 10. shanmukanathann sathu said...

  மேஜிக் கற்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன்

 11. ... on Saturday, October 10, 2015 3:19:00 pm  
 12. shanmukanathann sathu said...

  மேஜிக் கற்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன்

 13. ... on Saturday, October 10, 2015 3:21:00 pm  
 14. shanmukanathann sathu said...

  நான் இலங்கையில் வசிக்கிறேன் தயவுசெய்து இணயத்தில் மேஜிக் கற்பியுங்கள்

 15. ... on Wednesday, October 21, 2015 5:35:00 pm  
 16. shanmukanathann sathu said...

  மேஜிக்கை கற்க என்ன செய்வது எப்படி உங்களை அனுகுவது

 17. ... on Saturday, October 24, 2015 12:15:00 pm  
 18. Unknown said...

  மேஜிக் கற்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன்.சுயம்பு ராஜ்

 19. ... on Wednesday, December 16, 2015 9:20:00 am  
 20. Unknown said...

  எனக்கு மேஜிக் கற்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். நந்து

 21. ... on Saturday, September 23, 2017 9:54:00 am  
 22. Nantha kumar said...

  சின்ன மேஜிக் என்ன மேஜிக்

 23. ... on Saturday, September 23, 2017 9:55:00 am