என் பிரிய அம்முவின் நினைவில்
பழைய நினைவுகளைப்
பகிர்ந்துக் கொள்ள
புதிய தோழி எனக்குத் தேவை!

உலகப்போக்கு
உறவுகளின் போக்கு
ஒன்றுவிடாமல் பேசுவோம்!

என்
ரகசியங்களின்
கிடங்காக நீ கிட!

உன்
கவலைகள் களையும்
கரமாக என் இதயம் இருக்கும்!

நிறைகளை மட்டும் பேசும்
காதலர்களைப் போல் இல்லமால்
குறைகளைப் பகிர்ந்துக் கொள்ளும்
நண்பர்களாய் இருப்போம்!

உன்
குறைகளையெல்லாம்
ஒன்றுவிடாமல் கூறு
ஏனென்றால்?

நான்
உன் காதலன் அல்ல!
அலங்காரம் வேண்டாம்
அப்படியே
அழுக்கு 'நைட்டியுடன்' வரலாம்
ஏனென்றால்?

நான்
உன் காதலன் அல்ல!

இருவரும்
திருமணம் செய்து கொள்ளலாம்
வேறொருவரை!
உன்
கணவனோடு வா!
என் மனைவியோடு வருகிறேன்!
நால்வரும்
நட்பு பாராட்டுவோம்!

நட்பு
காதலைவிட கண்ணியமானது!
உயிரின்
உயிர்ப்பு நிலையது!
This entry was posted on 15:06 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

  புதியவன் said...

  அழகான கவிதை, வார்த்தையிலும் மாயம் செய்திருக்கிறீர்கள். இது போன்ற நட்புக் கவிதைகள் உலகில் மிகக் குறைவே. வாழ்த்துக்கள் மேஜிக் பாலு.

 1. ... on Wednesday, November 12, 2008 12:36:00 pm  
 2. அதிரை ஜமால் said...

  இப்படி ஒன்றை சொல்ல நினைத்துதான்
  இப்படி சொன்னேன்

  http://adiraijamal.blogspot.com/2008/11/blog-post_11.html

 3. ... on Thursday, November 13, 2008 8:13:00 pm  
 4. banu said...

  Kalakita po makka,


  wonderful,

 5. ... on Thursday, November 27, 2008 2:50:00 pm  
 6. banu said...

  இருவரும்
  திருமணம் செய்து கொள்ளலாம்
  வேறொருவரை!
  உன்
  கணவனோடு வா!
  என் மனைவியோடு வருகிறேன்!
  நால்வரும்
  நட்பு பாராட்டுவோம்!


  நட்பு
  காதலைவிட கண்ணியமானது!
  உயிரின்
  உயிர்ப்பு நிலையது!


  Really very very very very nice pa.

 7. ... on Thursday, November 27, 2008 2:52:00 pm  
 8. banu said...

  the picture also very very nice friend..........

 9. ... on Thursday, November 27, 2008 2:53:00 pm  
 10. uma said...

  மிக இனிமையான கவிதை..... உண்மையான நட்பை பறை சாட்டுகிறது.... வாழ்த்துக்கள் நண்பரே....

 11. ... on Friday, February 06, 2009 12:29:00 pm  
 12. Anonymous said...

  நிறைகளை மட்டும் பேசும்
  காதலர்களைப் போல் இல்லமால்
  குறைகளைப் பகிர்ந்துக் கொள்ளும்
  நண்பர்களாய் இருப்போம்!

  உன்
  குறைகளையெல்லாம்
  ஒன்றுவிடாமல் கூறு

  நட்பு
  காதலைவிட கண்ணியமானது!
  உயிரின்
  உயிர்ப்பு நிலையது!

 13. ... on Saturday, July 04, 2009 5:39:00 pm  
 14. baby said...

  very cute sentence....

  very superb feelings.
  good

 15. ... on Friday, November 13, 2009 10:21:00 pm